பிரான்ஸில் உள்ள மற்றொரு பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை அலுவலகத்திற்குள், கடந்த வாரம் புகுந்த செரிப் குவாச்சி மற்றும் சயித் குவாச்சி சகோதரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பத்திரிக்கை ஆசிரியர், கேலிச்சித்திரம் வரைபவர்கள்(Cartoonist) உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் பிரான்ஸின் மிகப்பெரிய நையாண்டி வார பத்திரிகையான லீ கெனார்ட் என்செய்னுக்கு(Le canard Enchine) மின்னஞ்சல் மூலம் கடந்த 8ம் திகதி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது, இது உங்கள் முறை என்றும் உங்களின் பத்திரிகையாளர்கள் கோடாரியால் துண்டு துண்டாக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பத்திரிகை அலுவலகத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-http://world.lankasri.com



























இந்த பிறப்பு அறியாத நாதேரிகளை சும்மா விடாதீர்கள் …