ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் இரண்டு தீவிரவாதிகளை பொலிசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் இருந்து சுமார் 300 பேர் சிரியா மற்றும் ஈராக் சென்று ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
அங்கு பயிற்சி பெற்று நாடு திரும்பிய தீவிரவாதிகள், அதிரடி தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.
மேலும் லியஜ் மாகாணத்தில் வெர்வியர்ஸ், நகரில் உள்ள பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தி ஏராளமான பொதுமக்களை கொன்று குவிக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து பொலிசார் உஷார்படுத்தப்பட்டு அதிரடி வேட்டை நடத்தப்பட்டது, இந்நிலையில் எவர்வியர்ஸ் நகரில் சந்தேகப்படும் நிலையில் சுற்றித்திரிந்தவர்களை பிடிக்க ரோந்து சென்ற பொலிசார் முயன்றனர்.
அப்போது அவர்கள் பொலிசார் மீது துப்பாக்கியால் சுட்டனர், பதிலுக்கு பொலிசாரும் சுட்டனர். அதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது நகரில் 3 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களும் நடந்தன.
இந்த சண்டையில் 2 தீவிரவாதிகளை பொலிசார் சுட்டுக்கொன்றனர். மேலும் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
பாரிஸ் தாக்குதலுக்கு தொடர்பில்லை
பாரிஸ் தாக்குதலுக்கும், பெல்ஜியம் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், தேசிய அளவில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு பிரதமர் சார்லஸ் மிக்கேல் தெரிவித்துள்ளார்.
-http://world.lankasri.com