தீவிரவாத அச்சுறுத்தலால் பெல்ஜியத்தில் யூதப்பள்ளிகள் மூடல்!

belgium_attack_002பெல்ஜியத்தில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, யூதப்பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

பெல்ஜியத்தின் முக்கிய நகரங்களான புரூசல்ஸ் மற்றும் ஆண்ட்வெர்ப் பகுதிகளில் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள யூத பள்ளிகள் அனைத்தும் தற்காலிமாக மூடப்பட்டன.

முன்னதாக, சிரியாவிலிருந்து திரும்பியுள்ள தற்கொலை படை தீவிரவாதிகளை குறி வைத்து பெல்ஜியம் பொலிசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இதில் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், இச்சம்பவத்தை தொடர்ந்து தற்போது பெல்ஜியத்தின் மிக முக்கிய நகரங்களை தீவிரவாதிகள் குறிவைத்துள்ளதாக உளவுதுறை மூலம் கிடைத்த தகவலை தொடர்ந்து முக்கிய பகுதிகளில் பொலிசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக பெல்ஜியத்தில் சுமார் 40 ஆயிரம் யூத மக்கள் வசிப்பதால், பள்ளிகள் மற்றும் வழிப்பாட்டு தளங்களில் அவர்களுக்கு எந்த வித அசம்பாவிதமும் நிகழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு பொலிசார் எடுத்து வருகின்றனர்.

-http://world.lankasri.com