பெல்ஜியத்தின் வீதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக படையினர் குவிக்கப்பட்டுவருகின்றனர்.
பெல்ஜிய பொலிஸாரைக் கொல்வதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் போட்டிருந்த திட்டத்தை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் கூறியிருந்த நிலையிலேயே இந்த பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உடனடியாக நடக்கவிருந்த தாக்குதல்களைத் தடுத்ததாகக் கூறுகின்ற காவல்துறையினர், அவற்றுடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்களை கைதுசெய்து விசாரணை நடத்திவருவதாகவும் கூறுகின்றனர்.
கிழக்கு நகரான வேர்வியர்ஸில் நடந்த ஆயுதமோதல் ஒன்றை அடுத்து 5 பேர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த வியாழனன்று நடந்த இந்தத் தாக்குதல்களில் இரண்டு ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்.
பிரான்ஸிலும் வீதிகளில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவாரத்துக்கு முன்னர் பிரான்ஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -BBC