இந்தோனேசியாவின் மரண தண்டனை: பிரேஸில், நெதர்லாந்து கண்டனம்

 

indonesia_execution
துப்பாக்கிச்சூடு நடத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

 

போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த தமது பிரஜைகளுக்கு இந்தோனேசியா துப்பாக்கிச் சூடு நடத்தி தண்டனை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, பிரேஸிலும் நெதர்லாந்தும் தங்களின் தூதுவர்களை மீள அழைத்துக் கொண்டுள்ளன.

இந்தோனேசியாவின் புதிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் ஆட்சியன் கீழ் வியட்நாம், மலாவி, நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூவருக்கும் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தோனேசிய பெண்ணொருவரும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஒருவர்.

பிரேஸிலும் நெதர்லாந்தும் மேற்கொண்டிருந்த இறுதிநேர மேன்முறையீட்டு முயற்சிகளும் நிராகரிக்கப்பட்டன.

2003-ம் ஆண்டில் இந்தோனேசியாவுக்குள் 13 கிலோவுக்கும் அதிகமான கொகேய்ன் போதைப்பொருள் கடத்தியதாக பிரேஸில் பிரஜை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ளதாக பிரேஸில் அதிபர் டில்மா ரோஸெஃப் கூறியுள்ளார். -BBC