ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடி, ஐரோப்பாவில் எழுந்துள்ள பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எவ்வாறு பதில் நடவடிக்கை எடுப்பது மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் நாடுகளிடையிலான ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பவை பற்றி விவாதிக்கின்றனர்.
பாரிஸில் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியும், பெல்ஜியத்தில் ஜிகாதி சதிக்குழு ஒன்று இயங்கிவந்தது கண்டுபிடிக்கப்பட்டும் இருந்த நிலையில் இந்த கூட்டம் நடக்கிறது.
யுக்ரெய்ன் சம்பந்தமாக எழுந்த தகராறு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ரஷ்ய உறவை மீளாய்வு செய்வதிலும் அமைச்சர்கள் கவனம் செலுத்துவார்கள்.
ரஷ்ய அரசுடன் மெதுமெதுவாக மீண்டும் நெருங்குவது என ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு விவகார தலைவர் ஃபெட்ரிகா மொகரினி பிரேரிக்கும் ஆவணம் ஒன்று வெளியில் கசிந்துள்ளது.
ரஷ்யாவுடன் நெருங்குவதை சில ஐரோப்பிய நாடுகள் ஏற்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. -BBC