உலகளவில் ஏற்றத்தாழ்வு வெகுவாக அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் கூறியுள்ளது.
அடுத்த வருடமளவில் ஒரு வீதமாகவுள்ள செல்வந்தர்கள், 99 வீதமுள்ள ஏனையவர்களை விட மேலும் சொத்துக்களை குவித்துவிடுவார்கள் என்று அது எச்சரித்துள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் டாவோஸில் இந்த வாரத்தில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களின் சந்திப்பு நடக்கவிருக்கும் தறுவாயில், இரு தரப்புக்கும் இடையே அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வின் அளவு குறித்து ஆக்ஸ்ஃபாம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயத்தில் உலக தலைவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
வரி ஏய்ப்பு, மேம்பட்ட பொதுச் சேவைகள் மற்றும் பணியாளர்களுக்கு போதுமான ஊதியம் ஆகியவை குறித்து அந்த அமைப்பு துரித நடவடிக்கை கோரியுள்ளது. -BBC