உக்ரைன் விமான நிலையத்தில் ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்: 50 பேர் பலி

ukraine_conflict_001உக்ரைனில் மீண்டும் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 50 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் திகதி உக்ரைனின் கிரிமியா மாகாணத்தை தங்களுடன் இணைத்து கொண்ட ரஷ்யா, அந்நாட்டின் கிழக்கு பகுதி முழுவதையுமே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இதற்காக உக்ரைன் ராணுவத்துடன் அவ்வப்போது போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் கட்டுபாட்டில் உள்ள டொனெஸ்ட்க்(Donetsk airport) விமான நிலையத்தை மீட்க உக்ரைன் ராணுவம் தற்போது தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனால் கிளர்ச்சியாளர்களுக்கு ராணுவத்திற்கும் இடையே நடந்த தாக்குதலில் இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இதற்கு வருத்தம் தெரிவித்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான்–கி–மூன், அங்கு உடனடியாக சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஐ.நா. தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.