ஈராக்கில் கால்பந்து விளையாட்டை தொலைக்காட்சியில் பார்த்த காரணத்திற்காக 13 சிறுவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஈராக் மற்றும் ஜோர்டன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து விளையாட்டை மொசூல்(Mosul) நகரை சேர்ந்த 15 வயதிற்கும் குறைவான 13 சிறுவர்கள் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.
இவர்களை சிறைபிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ், பொதுஇடம் ஒன்றிற்கு அழைத்து சென்று அவர்களை வரிசையாக மண்டியிட வைத்துள்ளனர்.
இதனையடுத்து பயத்தால் உறைந்து போயிருந்த அந்த சிறுவர்களை தானியங்கி துப்பாக்கி ஏந்திய ஒருவன் சரமாரியாக சுட்டு வீழ்த்தியுள்ளான்.
இதுகுறித்து தீவிரவாதிகள் கூறுகையில்,கால்பந்து விளையாட்டுகளை தொலைக்காட்சியில் பார்ப்பது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் இவர்களுக்கு கிடைத்த தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும் எனவும் உரக்க கோஷமிட்டுள்ளனர்.
மேலும் வெட்ட வெளியில் இறந்து கிடந்த தங்களது குழந்தைகளை எடுக்க வந்தால், தங்களையும் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் பெற்றோர்கள் யாரும் இறந்த உடல்களை மீட்க வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-http://world.lankasri.com