உலகிலுள்ள காண்டாமிருகங்களில் 80 சதவீதம் தென்னாப்ரிக்காவில் உள்ள நிலையில், நாட்டில் எஞ்சியுள்ள மிருகங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று சுற்றுச்சூழல் அமைச்சர் எட்னா மொலேவா அம்மையார் தெரிகூறுகிறார்.
கடந்த ஆண்டு மட்டும் தென் ஆப்ரிக்காவில் 1200க்கும் அதிகமான காண்டாமிருகங்கள் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டுள்ளன என்று அரசாங்கம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
தென்னாப்ரிக்காவில் இந்த அளவிலான காண்டாமிருகங்கள் ஒரே ஆண்டில் இதுவரை வேட்டையாடப்படவில்லை.
சரணாலயத்திலேயே பாதுகாப்பு இல்லை
இதில் மூன்றில் இரண்டு பங்கு காண்டாமிருகங்கள் தென் ஆப்ரிக்காவின் க்ரூகர் தேசியச் சரணாலயத்திலேயே சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டுள்ளன.
அந்தச் சரணாலயமே தென் ஆப்ரிக்காவில் மிகவும் பாதுகாக்கப்பட்ட இடமாக கருதப்படுகிறது.
காண்டாமிருகங்களில் கொம்புகளை விற்கும் வர்த்தகத்தில் பல பில்லியன் டாலர்கள் புழங்குவதாலேயே அவை அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன என்றும் மொலெவே கூறினார். -BBC