6,000 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி!

isis_irakஅமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 6,000க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த செப்டம்பர் 23ம் திகதி முதல் அமெரிக்க வான்வழி தாக்குதலை தொடங்கியது.

இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக அமெரிக்க நடத்தி வரும் தாக்குதலில் ஆறாயிரம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தலைவர் சக் ஹகேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி அளித்த பேட்டியில், ஆறு மாதங்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதலால் ஐ.எஸ்.ஐ.எஸ் மேற்கொண்டு முன்னேற முடியாமல் முடங்கியுள்ளது.

சுமார் 2 ஆயிரம் வான்வழி தாக்குதல்களை நடத்தி, 700 சதுர கிலோ மீற்றர் நிலத்தை மீட்டுக் கொடுத்துள்ளோம். தீவிரவாதிகளின் முக்கியமான நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம்.

இதில் தீவிரவாதிகளின் ராணுவ மையங்கள், எரிபொருள் நிரப்புமிடங்களும் அடங்கும் என்றும், இதன் காரணமாக தீவிரவாதிகளின் கரங்கள் நீளாமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com