ஏமனில் முன்னேறி வரும் ஹூத்தி போராளிகள்

yemenஏமன் நாட்டின் ஷியா பிரிவு முஸ்லிம் தீவிரவாதிகளான ஹூத்தி போராளிகள் தலைநகர் சனாவை வார இறுதியில் கைப்பற்றியதால், அந்த நாட்டு அதிபர் பதவி விலகினார்.

ஏமன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி ஹூத்தி இன போராளிகள் பல இடங்களை கைப்பற்றி வருகிறார்கள்

இந்தக் குழு ஏமன் அரசாங்கத்துடன் மாத்திரமல்லாது நாட்டின் தெற்கே அல்கைதாவுடன் போரிடுகின்றது.

தமது நாட்டின் வளங்களை சூறையாடவிளையும் வெளிநாட்டவர்களுடந்தான் தாம் நிழல் யுத்தம் புரிவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

அல்கைதாவை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். -BBC