சபாய் சட்ட மன்ற உறுப்பினர் தமிழச்சி காமாட்சி மலேசியா தமிழர்கள் தங்கள் பிறப்பு பத்திரத்தில் பங்சா என்ற இடத்தில “தமிழர்” என்று எழுதுங்கள் என்ற இயக்கத்தை ஆரபித்த விசியத்தை தினக்குரல் வேட்டைக்காரன் விளையாட்டா யாரோ எழுதச்சொல்லி எழுதியது போல, அரை குறை மக்கள் தொகை கணக்கை காட்டி எலி வேட்டையில் இறங்கி உள்ளார்.
இப்படித்தான் போர்ட்டிக்சன் மாசியும் நுனிபபுல் மேய்ந்தார். இருவரும் தமிழர்கள் இல்லை என்பதால் இந்த ஆர்ப்பரிப்பு இயல்புதான் ! ஆனால் இருவருக்கும் வாழ்வாதாரம் எங்கள் தமிழ்சசோறு? இப்படி ஆயிரமாயிரம் தமிழ் தமிழன் துரோகிகள் நாட்டில் உண்டு. தமிழகம் கத்துக்கொடுத்த பாடம்.பாவம் இவர்கள் இப்படித்தான். அது ஒரு வித அறம் செய்யும் விதி.
காமாட்சி சொல்வது என்ன வென்றால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மலேசியா தமிழர்களை தென்னாட்டு தமிழர்கள் என்று பிரித்த காரணம் சரி இல்லை “நாங்கள் தென்னகத தமிழர் நாட்டில் பிறக்கவில்லை” அதுபோல இந்தியாவில் பிறந்த இந்தியனும் அல்ல. மலேசியாவில் பிறந்த “மலேசியததமிழர்” ராக தமிழர் என்ற உரிமையை திருத்தி எழுத இயக்கம் தொடக்கி உள்ளார். இடையில் வந்தவன் எல்லாம் விருப்பத்துக்கு தன இனத்துக்கு விருப்பத்துக்கு வேட்டை ஆடுகிறான், பழமையான் மிகததொன்மையான் தமிழர் இனத்துக்கு உரிமை கொண்டாடினால் திராவிட குழும ஆதித் தமிழர்கள் வம்சாவளி வந்த இதர வேட்டை நாய்கள் ஏன் குரைக்கிறது?
தமிழ் பத்திரிகை உலகம் தமிழர் இனத்துக்கு தனி பெருமை ஏதும் தருவதில்லை , பத்திரிகை விற்காது என்று தமிழர்களை இந்தியன் என்று வேட்டை ஆடியதை நாங்கள் எதிர்க்க வில்லை, அல்லது தமிழுக்கும் தமிழனுக்கும் இந்தியனுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழப்பும் பேதமையை திருத்தவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக தமிழர்களை இந்தியன் பட்டியலில் போட்டு ஆடிய வேட்டைகளை கேற்கவில்லை. தமிழர்களின் இன அடையாளத்தை இதற்கு தினக்குரல் வேட்டைக்காரனுக்கு எங்கு வேல் பாயுது? பீறிடும் அந்த குருதியில் தமிழன் என்ற ஆதி மரபணு தான் உண்டு என்றும் சொல்ல விரும்புகிறோம். இந்தோனேசியால் ,சயாமில் ,கம்போடியாவில் இருந்து வந்தவன் எல்லாம் இன்று பூமி புத்ரா என்கிறான். ஏன் அவனை கேற்பது நீ வந்தேறிகள் என்று?
நாங்கள் தமிழர்கள் , இதுதான் எங்களுடைய காலம் காலமான தொன்மையான உண்மை அடையாளம் என்று மலேசியா தமிழர் தேசியம் ஒருங்கிணைப்பாளரும் ,உலகத தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவருமான பொன் .ரங்கன் மேலும் விளக்குகிறார்.
இந்தியர் என்றால் என்ன ? அதன் கலாச்சாரமும் பண்பாடும் என்ன ? அதன் தாய்மொழி என்ன ? அதன் வழிபாடுகள் என்ன ? என்று கேள்விகனைகளை நாமே கேட்டாலே , ”இந்தியர்” என்பது வெறும் 500 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயன் அவசரத்தில் ஹிந்துஸ்தானிய மக்களை பார்த்து வைத்த அர்த்தமற்றது பெயர் என தெளிவாக புரிய வரும்.
வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்னாள் வெள்ளைக்காரன் ஒருங்கிணைந்த மாநிலங்களை ஆட்சி செய்து அதை இந்தியா என்று பெயரிட்டதும் அவனே என்பது உலக வரலாறு.
தமிழர்கள் வரலாறு 50,000 ஆண்டுகளுக்கு ஏன் இன்னும் கணக்கில் முடியா ஆண்டுகளுக்கு முன்னாள் தோன்றிய மூத்த இனம் தமிழர் இனம். தமிழரின் முத்த 10,000 ஆண்டுகளுக்கு பழமை இலக்கிய இலக்கண நூலில் முதல் பாயிரத்திலே ”தமிழ்” என்று குறிப்பிட்டிருப்பது நாம் தமிழர் என்பது விளங்கிககொள்ளலாம்.
தமிழர் என்பதற்க்கான சான்றுகள்உலக வரலாறுகள் உள்ளன வேட்டைக்காரன் குசினில் இருந்து வேட்டை ஆடக்கூடாது . சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த தவரான புரிதலால் நாம் இந்தியர் என்று அடையாளபடுத்த பட்டு வருகிறோம். ஆனால் இப்போது இளைய தலைமுறையினர்கள் நம் இனத்தின் அடையாளத்தை தெளிவாக புரிந்து வருகிறார்கள்.
மேலும் , தமிழர் என்ற இனம் வெறும் நேற்று தோன்றிய இனம் அல்ல , அது ஒரு தேசிய இனம் சுமார் 75 நாடுகளில் 12 கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகிறோம். கணக்கெடுப்பில் பார்த்தால் 10 வது பெரிய இனமாக இருக்க வேண்டிய அங்கிகாரம் கொண்டவை ஆனால் அதற்கு தனி நாடு இல்லாமல் இருப்பதால் அந்த 10 வது என்ற அங்கிகாரம் இல்லாமல் இருக்கிறோம்.
தமிழர்க்கென்று பண்பாடு , கலை கலாச்சாரம் , மொழி , விழாக்கள் , வழிபாடுகள் , பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் தனி குணமும் உண்டு என்று நாம் தமிழர் இயக்கத்தின் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுளார்.
மேலும் சொல்ல போனால் நம்முடைய உறவுகளாக இருக்கும் தெலுங்கர்கர்களும் கன்னடர்களும் ஏறக்குறைய 1,000 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழர்களே , அது போலே மலையாளி உறவுகளும் 500 ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழர்களே.
இதுபோன்று தமிழர் இனத்திலிருந்து பிரிந்து இன்று சிறு சிறு இனமாக இருக்கும் பல இனங்களின் மொழிக்கு தாய்மொழி தமிழ் மொழி ஆகும். ஆகையினால் இது தொடர்பாக உள்துறை அமைச்சுக்கு நாம் தமிழர் இயக்கம் ஆவணங்களை தயார்படுத்தி வழங்க உள்ளது.
மலேசியா தமிழர்களும் அவர் அவர் குழந்தைகளின் பிறப்பு பத்திரத்தில் ”தமிழர்” போடுமாறு கேட்டு கொண்டது. பிறப்பு பத்திரத்தில் தமிழர் என்று எழுதும் வசதி பல ஆண்டுகளாகவே உள்ளது. இருப்பினும் இந்த கோரிக்கை தமிழர் என்ற இனத்திற்கு அங்கிகாரம் வேண்டி கொடுக்கபட்வுள்ளது.
அதுமட்டுமின்றி இந்தியர் என்று சொன்னால் ”தமிழர்” , ‘மலையாளி ‘, ‘தெலுங்கர்’ ஒன்று படுத்துவற்றக்கான ஒற்றுமைகள் ஏதும் இல்லை ,ஆனால் தமிழ் என்று சொன்னால் இந்த மூன்று இனங்களுக்கிடையே ஒற்றுமையை கொண்டு வரலாம். அரசு, அரசியல்,தேர்தல் ஆளுமைகளை காட்டி தமிழர்களை “இண்டியனாக்கி” ஏய்க்கும் வேலைகளை திராவிட கொடூரர்கள் இனியும் செய்ய வேண்டாம்.
நாட்டில் இருக்கும் 7 பத்திரிகைகளில், அஸ்ட்ரோவில் , THR ராகவில் மின்னலில் எத்தனை தமிழர்கள் இருகிறார்கள் என்றெல்லாம் வேட்டைக்காரன் வெட்டி பார்த்துவித்து .தமிழர் உரிமையில் கை வை என்று மட்டும் ஆலோசனை கூற ஆசைப்படுகிறேன். தினக்குரல் வேட்டைக்காரனுக்கு விபரம் வேண்டுமானால் மேடை போடுங்கள் துடிக்க துடிக்க உணர்வுகளை வெட்டிப போடுவோம்.
ம .அ. பொன் .ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
உலகத் தமிழர் பாதுகாப்பு மையம்.
016 6944223