ரஷியா – மேலைநாடுகள் இடையே போர் மூளும்: கோர்பசேவ் எச்சரிக்கை

ரஷியாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதற்றம் நீடித்தால், அது போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் மிகயீல் கோர்பசேவ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ரஷியாவை மீண்டும் ஒரு பனிப் போருக்கு மேற்கத்திய நாடுகள் இழுத்துள்ளன.

இந்தப் பனிப் போர், முழு போராக வெடிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார் அவர்.

கிழக்கு உக்ரைனில் அரசுப் படையினருக்கும், ரஷிய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் 5,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தச் சண்டையில், கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா உதவியளித்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.

கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளை மீண்டும் கைப்பற்ற உக்ரைன் நிகழ்த்தி வரும் தாக்குதல்களுக்கு மேற்கத்திய நாடுகள் உதவுவதாக ரஷியா குற்றம் சாட்டி வருகிறது.

-http://www.dinamani.com