காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வே அமைதிக்கான அச்சாரம்

Kashmir-Map“இந்தியத் துணைக் கண்டத்தில் அமைதி நிலவ, காஷ்மீர் பிரச்னக்கு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியம்’ என பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் அய்ஸாஸ் அகமது செளத்ரி வியாழக்கிழமை கூறினார்.

தலைநகர் இஸ்லாமாபாதில், ஐ.நா. பாதுகாப்புக் குழு நிரந்தர உறுப்பு நாடுகள், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் தூதர்களிடையே அவர் பேசியதாவது:

காஷ்மீரில் சுய அதிகாரத்துக்காக நடைபெறும் போராட்டம், வெளிநாடுகளின் தூண்டுதலால் நடைபெறுவதல்ல.

அது அந்தப் பகுதி மக்களின் போராட்டம்.

அந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டால்தான் இந்தியத் துணைக் கண்டத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவும் என்றார் அவர்.

-http://www.dinamani.com