ISIS தீவிரவாதிகள் அடிக்கடி வெளிநாட்டுப் பிரஜைகளை பிடித்து வைத்திருப்பதும். அவர்களை விடுவிக்க பணம் கேட்ப்பது வழக்கம். அத்தோடு அவர்களை கொல்லப்போவதாக மிரட்டுவார்கள். சமீபத்தில் சிரிய எல்லையில் பறந்த ஜோர்டான் நாட்டு விமானம் ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானது. அந்த போர் விமானத்தில் இருந்த விமானி தனது ஆசனத்தை அப்படியே இஜெக்ட் செய்து, பாரசூட்டைப் பாவித்து தப்பிவிட்டார். ஆனால் அவர் தரையிறங்கிய இடம் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள இடம். அவரை ISIS தீவிரவாதிகள் பிடித்துவிட்டார்கள். ஜோர்டான் நாட்டிடம் பேரம் பேசாமல் அவரைக் கொலைசெய்யப்போவதாக மிரட்டியுள்ளது இந்த தீவிரவாத இயக்கம்.
ஆனால் வழமைக்கு மாறாக,ஜோர்டான் நாடு ஒரு அறிவித்தலை இன்றைய தினம்(30) விடுத்துள்ளது. அது என்னவென்றால் எமது நாட்டு விமானியை நீங்கள் கொலைசெய்தால் , எங்கள் நாட்டில் சிறைச்சாலையில் ,நாம் அடைத்து வைத்துள்ள அனைத்து ISIS தீவிரவாதிகளையும் உடனே தூக்கில் இடுவோம் என்பது தான் அந்த அறிக்கை ஆகும். ஜோர்டான் நாட்டைப் பொறுத்தவரை இவ்வாறு அவர்கள் செய்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதனால் ISIS இயக்கமே ஆடிப்போய்விட்டது என்கிறார்கள்.
அட தீவிரவாதிகள் மட்டுமா இப்படி கொலைசெய்வார்கள். இதோ பாருங்கள்.. நாமும் செய்வோம் என்று சொல்லாமல் சொல்லியுள்ளது ஜோர்டான் அரசு !
-http://www.athirvu.com
இது போன்ற பதிலடிகளைத்தான் நாம் விரும்புகிறோம். ஒரு தீவிரவாத இயக்கம் உலக மக்களையே கலக்குகிறது என்றால் அவர்களைக் கலங்க வைப்பதற்கு ஒரு வழி இருக்கத்தான் செய்யும். ஜோர்டான் வழி ஜோரான வழி! இஸ்லாமிய அரசாங்கங்கள் இன்னும் மாற்று வழிகளை ஆராய வேண்டும்!
அப்படி போடு,சில வேளைகளில் முல்லை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.
அது சரியான முடிவே. இந்த ஈன ஜென்மங்களை ஆரம்பத்தி இருந்தே கலை எடுத்திருக்க வேண்டும்.
இவங்களை பார்க்கும் இடமெல்லாம் சுட்டு தள்ளுங்கள் .