ஹொங்கொங்கில் கூடுதல் ஜனநாயக உரிமைகள் கோரி போராட்டம் நடத்துகின்ற பல்லாயிரக்கணக்கானோர் மீண்டும் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு, இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த ஆர்ப்பாட்டங்கள் அவ்வப்போது வன்முறைகளாக மாறின.
ஆனால், இன்று ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் அமைதியாகவே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஹொங்கொங்கில் அடுத்த தலைமையை தெரிவு செய்வதற்காக 2017 இல் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவோர் தொடர்பில் தங்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிவருகின்றனர்.
இன்றைய பேரணியில், 50 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பியிருந்தனர்.
ஆனால், குறைந்தளவானோரே கலந்துகொண்டமை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகின்றார். -BBC