வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஒபாமாவும், புத்த மத தலைவர் தலாய் லாமாவும், அமெரிக்காவில் நடவுக்கள்ள நிகழ்ச்சியில், ஒரே மேடையில் தோன்ற உள்ளனர்.
மத சுதந்திரம்:அமெரிக்காவின் வாஷிங்டனில், வரும் 5ல், தேசிய வழிபாட்டு ஆண்டு கூட்டம் என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஒபாமா, மத சுதந்திரம் என்ற தலைப்பில், முக்கிய உரை நிகழ்த்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, திபெத்தை சேர்ந்த புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அழைப்பிதழ் அனுப்பி உள்ளனர். அவரும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமாவும், தலாய் லாமாவும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது, சீன அரசாங்கத்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
கண்டனம்:தலாய் லாமாவை, பிரிவினைவாதி என்ற முத்திரை குத்தி, நாட்டை விட்டு வெளியேற்றியுள்ள சீன அரசு, அவருக்கு ஆதரவாக செயல்படுவோருக்கு, அவ்வப்போது கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில், தலாய் லாமாவும், ஒபாமாவும் பங்கேற்க உள்ளது, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ‘ஒபாமாவும், தலாய் லாமாவும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது, இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவ்வாறு பங்கேற்றாலும், இவர்கள் பேச்சு நடத்துவது குறித்து, இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை’ என்றனர்.
-http://www.dinamalar.com