இந்திய பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிர்வரும் மார்ச்சில் விஜயம் செய்யும் போதே அவர் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டங்களை இதன்போது அவர் பார்வையிடவுள்ளார்.
அத்துடன் 13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும் அவர் இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இதேவேளை பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இதனையடுத்தே மோடி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com
வடவனும் சிங்களவனும் கைகோர்த்து ஈழத் தமிழர்களுக்கு இதுவரை செய்த கொடுமைகள் போதாது என்று இன்னும் எதையோ செய்ய விபரீத திட்டங்களை வகுக்கப் போகிறார்கள்.எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம்.அவர்களின் பேச்சுவார்த்தையில் இந்திய நடுவண் அரசு சார்பாக தமிழ் நாட்டின் கோபால் சாமி அதிகாரப் பூர்வமாக கலந்து கொண்டால் கொஞ்சம் நம்பிக்கை ஒளி வீசலாம்.
வைகோ முதல் நெடுமாறன் > கலைஞர் > சீமான் வரை வாயால் தமிழ் ஈழம் – சிங்களவரை அழிப்போம் என வாயாலேயே இங்கிருந்து கூப்பாடு போடுவார்கள் > ஆனால் – ஒரு துரும்பும் அசையாமல் பார்த்து கொள்வார்கள் ! பிரதமர் முறையாக இறங்கி பேசி முடிவெடுக்க முனைவது நல்ல தலைமைத்துவத்துக்கு அழகு !! அவராவது வாய் சொல் பேசாமல் உண்மையிலேயே முயல்கிறார் !!
பார்போம் !!வைகோவை தமிழ்நாடு ஒதுக்கி வைத்து பல வருடம் ஆயிற்று <<<<
எல்லா உலக இந்டியர்களுக்கும் POI என்ற people of indian ஒரிஜின் அடையலாம் தர சொன்னார் மோடி …ஒட்டு போடலாமா என்று சொல்லவில்லை. அடுத்து இலங்கை போகும் இவர் அங்குள்ள எல்லா தமிழ் மக்களுக்கும் POI அட்டை கொடுத்து. சிங்களத்து பையன்கள் POI இல்ல என்பதால் அவுங்களை சேர்க்காம பாக்கணும் இல்லாட்டி அடுத்த அடி இந்தியாவுக்கு. ஒரு சனாதிபதி ஒரு ப்ரிதமர் எல்லையில் மீனு பிடிக்கிற புலப்பா சரி செய்ய முடியல வீடு திட்டமா? தமிழன் மண்ணில் சிங்களவனுக்கு வீடுகள் இதவிட வேற என்ன கிழிக்க இருக்கு?செத்து புழைக்கும் எங்க தமிழீழ மக்களுக்கு என்ன செய்ய போற? அதை பேசு …மண் ,மணல் நிலம்.,வீடுகள் எல்லாம் திருடி புட்டான் அத கேளு ? தமிழ் பெண்கள அடிச்சி சிங்கள்தவன் புள்ள தரனாம் அத கேளு ? 3 லச்சம் தமிழர்களை கொன்றதக்கு உயிர் நட்டம் கேளு …இதானப்பா ஆன்மிகம் மனிதம் கேளு. புதிய சனாதிபதிய மண்ட கழுவ போக வேண்டாம். அவர் சுத்தமா இருக்காரு.
தமிழனின் இறுதி சக்கையையும் பிழியும் வரை காத்திருந்து -பதவி சுகம் போனால் / உயிர் போய்விடும் என
வாளாவிருந்த உலக தமிழர் தலைவன் > நாலாவது தமிழ் > வள்ளுவனை எழுப்பிய மூதறிஞர் டாக்டர் கலைஞர் மாமணியை பிரதமர் உடன் அழைத்து சென்றால் ஈழத்தில் தமிழ் வளம் பெரும் > பல்லாயிரம் தமிழறிஞர்கள் நலம்பெருவர் > அடுத்த செம்மொழி மாநாடு ஈழ மண்ணில் நடத்தலாம் !!!