ஜப்பானியர்களின் ரத்தத்தை குடிப்போம்: சபதமிடும் ஐ.எஸ்.ஐ.எஸ்

isis_threat_001கண்ணில் படும் ஜப்பானியர்களை அனைவரையும் கொன்று ரத்தத்தை குடிப்போம் என ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஜப்பான் பிரதமருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் விடுத்த கோரிக்கைகளை ஜப்பான் அரசு நிறைவேற்றாத நிலையில் தன்னிடம் பிணையக்கைதியாக இருந்த ஊடகவியலாளர் கெஞ்சி கோட்டோவை(Kenji Goto) நேற்று தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளனர்.

அந்த கொடூரக் காட்சியின் வீடியோவில் தோன்றிய ஜிஹாதி ஜான்(Jihadi John) பேசியதாவது, ‘ அபே(Shinzo Abe) உன்னுடைய இந்த பொறுப்பற்ற முடிவால், இந்த கத்தி கெஞ்சியின் தலையை மட்டும் வெட்டாது.

எங்கள் கண்ணில் படும் ஜப்பானியர்கள் ஒவ்வொருவரையும் கொன்று அவர்களின் ரத்தத்தால் எங்கள் தாகத்தை தணிப்போம். இனி ஜப்பானிற்கு இருண்டகாலம் தொடங்கிவிட்டது என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளான்.

இந்த கொடூர தாக்குதலை கண்டித்த ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, ஜப்பான் அரசு தீவிரவாத்திற்கு எப்போதும் வளைந்து கொடுக்காது என பதிலளித்துள்ளார்.

மேலும், உலகம் முழுவதும் உள்ள ஜப்பானிய குடிமக்களின் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் வகையில் தூதரகங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தனது மகனின் மரண செய்தியை கேட்ட கெஞ்சி கோட்டோவின் தாய் Junko Ishido மிகவும் மனமுடைந்து வேதனையின் உச்சத்திற்கே சென்றுள்ளேன் என கண்ணீர் மல்க கதறியுள்ளார்.

மேலும் தனது மகனின் அன்பையும், தைரியத்தையும் ஜப்பானிய மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்நிலையில் கெஞ்சி கோட்டோவின் கொலைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com

TAGS: