ஐநா விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கும் வகையில் அனைத்துலக சமூகம் அரசை கோரவேண்டும்!

genocideஇலங்கையின் புதிய அரசு தாம்  நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் தமிழ் மக்கள் மீது அதீத அக்கறை கொண்டுவருவதாகவும் சர்வதேச ரீதியாக கூறிக்கொள்ளும் விடயத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சர்வதேச சுயாதீன விசாரணையை கருத்தில் கொண்டு அனைத்துலக சமூகத்திடம் ஐநா விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கும் வகையில் அரசை கோர வலியுறுத்தியுள்ளது

இலங்கையின் புதிய அரசாங்கம் நடைபெற்ற யுத்தம் விடயமாக எக்காரணம் கொண்டும் சர்வதேச விசாரணையை அனுமதிக்கமாட்டோம் என தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

அனுபவரீதியாக இலங்கையின் அரசின் உள்ளக விசாரணை ஈழத்தமிழர்களுக்கு எவ்வித நீதியையும் பெற்றுக்கொடுக்க மாட்டாது என்ற வகையில் , தாம் உள்ளக விசாரணையை முற்றுமுழுதாக நிராகரிக்கும் வேளையில் தமிழ் மக்களுக்கு நேர்மையான நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட அனைத்துலக சர்வதேச விசாரணையே புலம்பெயர் மக்கள் வலியுறுத்தி நிற்பதாக colombogazette இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

http://colombogazette.com/2015/02/06/diaspora-want-un-team-in-lanka/

இலங்கையில் சர்வதேச விசாரணை வேண்டும்- புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கோரிக்கை

இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கவேண்டும் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் கோரியுள்ளனர்.

சர்வதேசத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய தமிழர்களின் தேசிய சபை, டென்மார்க்கின் தமிழ் சம்மேளனம், இத்தாலியின் ஈழம் தமிழர் சபை, பிரான்ஸின் தமிழ் ஈழம் அமைப்பு, நியூஸிலாந்தின் தமிழர் சபை, நெதால்லாந்தின் தமிழ் பேரவை, நோர்வேயின் ஈழம் தமிழர் சபை, சுவிஸின் ஈழம்தமிழ் சபை, பெல்ஜியத்தின் தமிழ் கலாசார சபை, ஜேர்மனியின் ஈழம் தமிழர் சபை என்பன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.

போர்க் குற்றச்சாட்டு தொடர்பில் உள்நாட்டு விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லை. அது சாத்தியமில்லை என்பதற்கு சாட்சியங்கள் உள்ளன.

எனவே ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்று இந்த அமைப்புக்கள் கோரியுள்ளன.

-http://www.tamilwin.com

TAGS: