இலங்கை அரசாங்கம் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்து கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாக சீனாவின் விசேட பிரதிநிதி லியூ ஜியான்சோ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தலைவர்களை சந்தித்த பின்னர் அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கம், சீனாவின் திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் விசேட பிரதிநிதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்புக்களின் போது சீனாவின் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் தடைகள் இருப்பதாக தாம் கருதவில்லை என்று பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
சீனாவை பொறுத்தவரை, இலங்கையில் அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறது.
சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் இலங்கைக்கு வந்துசென்றமை குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சீனாவின் விசேட பிரதிநிதி லியூ ஜியான்சோ சீனாவை பொறுத்தவரை இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ அச்சுறுத்தலாக இருக்காது என்று தெரிவித்தார்.
-http://www.tamilwin.com
ஆமாம் எந்த தடையும் இல்லை ,,தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் சீனா காரர் ,இவர்களை நம்பினால் உடலில் உள்ள ரத்தத்தை இழக்க நேரிடும் ,அதுக்கு பதிலாக டிங்கி கொசுவிடன் ரத்தத்தை தானம் செய்துவிடலாம்