தீவிரவாதிகளை ரகசியமாய் உளவு பார்க்க பிரான்சின் சூப்பர் ஐடியா

france_traces_001தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் மூலம், பிரான்ஸ் ராணுவம் கூர்ந்து கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலமாக உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதால், பிரான்ஸ் ராணுவத்தை சேர்ந்த சுமார் 50 அதிகாரிகள் சமூக வலைதளங்களை உளவு பார்க்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

போலியான பேஸ்புக் கணக்குகள் மூலம் ஜிகாதிகளின் வட்டத்திற்குள் நுழைந்து, இணையதளம் மூலமாக தாக்குதல் திட்டங்களுக்கு ஆள் சேர்க்கும் முயற்சியை முறியடிக்கும் விதமாக தீவிர நடவடிக்கையில் ராணுவத்தினர் இறங்கியுள்ளனர்.

ராணுவத்தின் 50 அதிகாரிகளை சேர்ந்த உயர்மட்ட குழுவிற்கு கீழ் சுமார் 1500 ராணுவ வீரர்கள் அடங்கிய 77th Brigade என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிஸ் தாக்குதலை தொடர்ந்து “ Stop-Djhihadisme” என்ற இணையதளத்தை தொடங்கியது முதல், தீவிரவாத தாக்குதலை முறியடிக்கும் விதத்தில் பிரான்ஸ் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

http://world.lankasri.com