தமிழகத்தில் இருந்து அகதிகளை அழைத்துக் கொள்வதில் இலங்கை அரசாங்கம் அவசரப்படவில்லை

tamilnadu_refugees_001இந்தியாவில் இருந்து தமிழ் அகதிகளை திருப்பியழைப்பதில் இலங்கை அரசாங்கம் அவசரம் காட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல காரணங்கள் இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள சுமார் ஒரு லட்சம் அகதிகள் முதலில் தமது விருப்பத்தின்பேரிலேயே இலங்கைக்கு வரவேண்டும்.

அடுத்ததாக அவர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு முன்னர் இலங்கையில் இன்னும் குடியமர்த்தப்படாமல் உள்ள உள்ளூரில் இடம்பெயர்ந்த 26,056பேரை குடியமர்த்த வேண்டியுள்ளது.

இதற்கு அப்பால் முக்கியமாக இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின்போது அரசாங்கத்துக்கு எதிரான தேசியம் பேசும் கட்சிகள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான கொள்கையுடைய கட்சிகள் என்பன இந்தியாவில் இருந்து அகதிகள் வருவார்களாக இருந்தால் அதனை தமது பிரசாரங்களுக்கு பயன்படுத்தக்கூடும்.

இந்த செயல் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பு என்ற அடிப்படையில் அவை கூறக்கூடும்.

எனவே சிறிசேன- ரணில் அரசாங்கம் இந்த விடயத்தில் அவசரப்பட தேவையில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக இந்திய செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

தமிழக அரசாங்கத்தை பொறுத்தவரை இன்னும் இலங்கையில் முழுமையான அமைதி திரும்பவில்லை என்று கூறுகிறது.

எனினும் இந்திய மத்திய அரசாங்கம் தமிழர்களை திருப்பியனுப்புவதில் அவசரத்தை வெளிக்காட்டி வருகிறது.

-http://www.tamilwin.com

TAGS: