இலங்கையில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளும் என கருதவில்லை எனமனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியா பசுவிக்கிற்கான இயக்குநர் பிரட்அடம்ஸ் ஐ.பீ எஸ் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு தலைமை தாங்கிய ஜெனரல்சரத்பொன்சேகா அரசாங்கத்துடன் உள்ளதை விசேடமாக சுட்டிக்காட்டியுள்ள அவர் இதன் காரணமாக உள்நாட்டில் முன்னெடுக்கப்படும்விசாரணைகள் அரசியல்மயப்படுத்தப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கம் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளதால்,விசாரணைகள் உள்நாட்டு அரசியல் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளலாம், தற்போதைய நடைமுறையின் மையமாக ஐக்கிய நாடுகளே விளங்கவேண்டும்,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திப்பது குறித்து நாங்கள் ஆர்வமாகவுள்ளோம், என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilcnnlk.com


























