இலங்கையின் வடமாகாண சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தமிழர் மீதான இனஅழிப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க முயற்சிகளை எந்தளவில் பாதிக்கும் என்பதை தற்போதைக்கு அளவிடமுடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய அதிகாரிகளை கோடிட்டு தெ ஹிந்து இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
வடமாகாணசபையின் தீர்மானம் இலங்கையில் வியாகூல தன்மையை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
இந்த பிரேரணையானது, ஜெனீவாவில் இலங்கை தொடர்பிலான அறிக்கையை எந்தளவில் பாதிக்கும் என்பதை இந்திய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அறிக்கை மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்படாதநிலையில் அது, இலங்கையின் புதிய அரசாங்கம், தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் என்று இந்திய அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதேவேளை புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை, சர்வதேச இனஅழிப்பு விசாரணைகள் சவால்களை ஏற்படுத்துமானால், அது முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.
இதற்கிடையில், இனஅழிப்பு பிரேரணை காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அறிக்கை சமர்ப்பிக்கப்படுமானால், அதில் இந்தியா 2014ஆம் ஆண்டைப்போன்று பிரசன்னமாகாது இருக்கலாம்.
இதுஇவ்வாறிருக்க, இலங்கை ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்லும்போது அங்கு இந்திய பிரதமர் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் விரிவாக ஆராய்வார் என்றும் ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
-http://www.tamilwin.com