சித்ரவதை செய்து கொடூரமாக கொல்லப்படும் விலங்குகள்

animal_bite_001பிரித்தானியாவில் உள்ள இறைச்சி கூடம் ஒன்றில் விலங்குகளை சித்ரவதை செய்து கொடூரமாக கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Staffordshire நகரில் உள்ள 112 வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு இறைச்சி கூடத்தில் தான் இந்த கொடூர காட்சிகள் அரங்கேறியுள்ளன.

இறைச்சி கூடங்களில் விலங்குகள் சித்ரவதைக்கு உள்ளாவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து Hillside Animal Sanctuary அமைப்பை விலங்குகள் நல ஆர்வலர்கள் ஒரு ரகசிய புலனாய்வை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, புகார் கூறப்பட்ட இறைச்சி கூடத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு ரகசிய கமெராவை பொருத்தினர்.

இதில் கடந்த 5 மாதங்களாக விலங்குகளை பல சித்ரவதைகளை செய்து கொடூரமாக கொல்லும் காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளன.

பசுக்களின் கால்களை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு, அவற்றின் கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொல்வதுபோல் காட்சிகள் பதிவாகியுள்ளன.

மற்றொரு வீடியோவில் பன்றிகளை உதைத்து காதுகளை பிடித்து தரையை நோக்கி வீசி அடிக்கிறார்கள். பின்பு, அவற்றை தூக்கி இரும்பு கதவில் மோதி, கடைசியாக துப்பாக்கியால் சுட்டு கொல்கிறார்கள்.

ஆடுகளும் இதே சித்ரவதைகளை அனுபவித்து கடைசியில் இறக்கின்றன. விலங்குகளை தாக்கி சித்ரவதை செய்யும்போது பிற பணியாளர்கள் அந்த கொடூரக்காட்சிகளை பார்த்து ரசித்து சிரிப்பது போல் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இறைச்சி கூடத்தின் இந்த மோசமான நடவடிக்கைகளை கண்டித்த Hillside Animal Sanctuary அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர், விலங்குகளை சித்ரவதை செய்வது சட்டப்படி குற்றம் என்றும், அவ்வாறு சித்ரவதை செய்பவர்களுக்கு 20,000 பவுண்டுகள் அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றார்.

மேலும் விலங்குகள் பாதுகாப்பு சட்டங்கள் இருந்தும் அது சரிவர செயல்படாத காரணத்தினால் தான் இதுபோன்ற குற்றங்கள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com