வார இறுதியில், அன்வார் இப்ராகிமின் ஆதரவாளர்கள் சோகோ, டட்டாரான் மெர்டேகா வட்டாரத்தில் ஒன்றுதிரண்டு அவர் சிறையிடப்பட்டதை எதிர்த்து பேரணி நடத்தப்போவதாக தகவல் கிடைத்திருக்கிறது என போலீசார் கூறுகிறார்கள்.
எப்படிப்பட்ட பேரணியையும் சமாளிக்க போலீஸ் ஆயத்தமாக உள்ளது என போலீஸ் படை துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம் குறிப்பிட்டதாக த சன் நாளேடு கூறியது.
“பேரணி நடந்தால் அது சட்டப்படியாகவும் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடப்பதை உறுதிப்படுத்துவது எங்கள் பொறுப்பு”, என்றாரவர்.
ஆனால், பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி இதைப் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என மலேசியாகினியிடம் தெரிவித்தார். தமக்குத் தெரிந்த இயக்கம் “விடுதலை நோக்கி நெடும்பயணம்” என்னும் இயக்கம் மட்டுமே என்றாரவர்.
என்றாலும் அன்வாரின் ஆதரவாளர்கள் அவர்களாகவே அப்படியொரு பேரணியை ஏற்பாடு செய்யும் சாத்தியத்தை அவர் மறுக்கவில்லை.
வரப் போகுது நம்பிக்கை நாயகனின் அரசுக்கு ஆப்பு!.
MH 370 விமானம் நமது வானில் பறந்து போனதை அறியோம் ;
MH 17 விமானம் ஏன் தாக்கபட்டது என்பதை அறியோம் ;
அல்தாந்துயா நாட்டிற்க்குள் வந்ததை அறியோம் ;
கொலை குற்றவாளி வெளிநாட்டிற்கு ஓடி போனதை அறியோம் ;
அத்தியவாசிய பொருட்கள் விலை உயர்ந்து விட்டதை அறியோம் ;
“BRIM” என்பது லஞ்சம் என்பதை அறியோம் ;
கள்ளக்குடியேறிகள் நாட்டிற்குள் வருவதை அறியோம் ;
இப்படி அறியோம் ;அறியோம் ;அறியோம் என்று கூறிக்கொண்டு முட்டையிலே மயிறு புடுங்குங்கோ.