தம்மீது சுமத்தப்பட்டது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்று அன்வார் இப்ராகிம் கூறிக்கொண்டிருப்பதால் அவர் அரச மன்னிப்பை நாட மாட்டார் என்கிறார் பாஸ் எம்பி காலிட் சமட்.
இது தம்முடைய தனிப்பட்ட கருத்து என்றும் அவர் சொன்னார்.
“அன்வார் அதற்கு மனுச் செய்ய மாட்டார் என்றே நம்புகிறேன் அப்படிச் செய்வது குற்றத்தை ஒப்புக்கொள்வது போலாகும்”, என அந்த ஷா ஆலம் எம்பி கூறினார்.
முதலாவது குதப்புணர்ச்சி வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டபோதுகூட அன்வார் அரச மன்னிப்பை நாடவில்லை.
“அரச” என்றால் அரசு வேறு அரசர் வேறு சாமாட். ஒரு முன்னாள் துணை பிரதமர் ,இந்நாள் எதிர்க்கட்சி தலைவர். உலகமே தப்பு தீர்ப்பு என்கிறது.பாகாதான் MP களும் DuN களும் அரசரரிடம் நியாங்களை சொல்லி விடுதலைக்கு விண்ணப்பிக்கலாம். அன்வார் மன்னிப்பு கேற்க வேண்டாம் நீங்களும் மன்னிப்பு கேற்க வேண்டாம். மனிதாப விடுதலை கோரலாம். உயர் நீதிமன்ற விடுதலையை அப்பீல் மறுத்தது. யாருமே பார்க்காத குத குற்றவியல் …..விட்டோ ,விற்றோ சைபுல் விரும்பியையும் சரியாவில் நிறுத்தலாம். அப்பீல் நீதிமன்றம் இந்த உத்தரவையும் சைபுல் மீது சுமத்தி இருக்கலாம். குதப்புணர்ச்சி யார் விட்டது என்பது முதன்மை வக்கர வசீகரம் இல்லையா?
சரி மாமோய் ..நல்ல முடிவு..
அப்படி இருப்பதே சரியாக தேர்வு…..
உள் இருந்தே ஆட்சியை கவிழ்க்க முடிவு செய்து விட்டார் போலும். நம்பிக்கை நாயகனின் போதாத காலம் இது.
தவறு செய்தவர்கள் தான் தண்டனைக்கு பயந்து மன்னிப்பு கேட்பதுண்டு. ஆனால் வீண்பழி சுமப்பவர் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? அன்வார் பார்க்காத சிறையா? ஏற்காத தண்டனையா?
இந்த தண்டனைக்கும் சிறைக்கும் பயந்தவராய் இருந்தால் அரசியல் புகலிடம் நாடி அந்நிய தேசம் போயிருப்பாரே..? எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உண்டு…நாட்டு மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கும் போது சந்தோஷமாக ‘கோல்ப்’ விளையாட அன்வாருக்குத் தெரியாது.