உக்ரைனில் உள்நாட்டுப் போர்: 27 பேர் பலி

ukrine_meeting_001உக்ரைன் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் அமலாகும் தருணத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே வெள்ளிக்கிழமை மீண்டும் மோதல் வெடித்து.

உக்ரைன் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் ரஷியா, உக்ரைன் நாடுகளிடையே வியாழக்கிழமை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் சனிக்கிழமை நள்ளிரவில் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே வெள்ளிக்கிழமை திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் உள்பட இரு தரப்பிலும் மொத்தம் 27 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சல்லா மெர்கெல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அமைதி ஒப்பந்தம் தோல்வியடைந்தால் ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் ஏற்கெனவே விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மேலும் அதிகரிக்கும்’ என்றார்.

-http://www.dinamani.com