ஷாபி: அம்பிகாமீது நீதிமன்றத்தை அவமதித்த குற்றம் சாட்டப்பட வேண்டும்

shafee abமுன்னாள்  வழக்குரைஞர்  மன்றத்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்மீது  நீதிமன்றத்தை  அவமதித்த  குற்றம்  சாட்ட  வேண்டும்  என  வழக்குரைஞர்  ஷாபி  அப்துல்லா  வலியுறுத்தியுள்ளார்.

“அன்வார்  இப்ராகிமைச்  சிறைக்கு  அனுப்பியது  பிஎன்  செய்த மிகப்  பெரிய  தவறு  எனக்  கதை சொல்கிறார்  அம்பிகா. நீதிமன்றங்கள்  பிஎன்  சார்ந்தவையா?

“நீதிமன்றங்கள்  பிஎன்  சார்ந்தவை  என்று  கூறும்  அம்பிகாமீது  நீதிமன்றத்தை  அவமதித்ததாகக்  குற்றம்  சாட்டப்பட  வேண்டும்.

“நடவடிக்கை  மேற்கொள்ள  சட்டத்துறைத்  தலைவரிடம்  பரிந்துரைக்கிறேன்”, என்றாரவர்.