நாளை அன்வார் வெளிவரும்போது பிகேஆர் ஆதரவுப்-பேரணி நடத்தும்

ralஅன்வார்  இப்ராகிம்  அவதூறு  வழக்கு  ஒன்றில்  சாட்சியமளிக்க  நாளை  ஜாலான்  டூட்டா  நீதிமன்ற  வளாகம்  வரும்போது   பிகேஆர் அவரை  ஆதரித்து  பேரணி  ஒன்றை  நடத்தும்.

“காலை  மணி  8.30க்கு  நடைபெறும் வெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமானுக்கு  எதிரான  வழக்கில் பொதுமக்கள்   அன்வாருக்கு  ஆதரவு  தெரிவிக்க  வேண்டும்”,  என பிகேஆர்  இளைஞர்  தலைவர்  நிக்  நஸ்மி  நிக்  மாட்  கேட்டுக்கொண்டார்.

இதுவரை  அன்வாருக்கு  ஆதரவு  தெரிவித்து  பேரணிகளிலும்  மெழுகுதிரி   ஏந்திய  கூட்டங்களிலும்  கலந்துகொண்ட  பொதுமக்களுக்கு  அவர்  நன்றி  தெரிவித்துக்  கொண்டார்.