ஏமனில் நிலவும் அசாதார சூழ்நிலை: தூதரகத்தை தற்காலிகமாக மூடிய ஜேர்மனி

yemen_embassy_001ஏமன் நாட்டில் நிழவி வரும் வன்முறை மற்றும் அசாதார சூழ்நிலைகளால் அந்நாட்டில் உள்ள தனது தூதரகத்தை தற்காலிகமாக மூடியுள்ளதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.

ஏமன் தலைநகர் Sanaa-வில் உள்ள பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தூதரகங்கள் தற்காலிகமாக மூடியதை தொடர்ந்து ஜேர்மனியும் அதே முடிவை பின்பற்றியுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஜேர்மனியின் வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர், சமீபத்தில் ஏமன் அரசாங்கத்தை ஷிட்டே (Shiite) அமைப்பு போராளிகள் கைப்பற்றியுள்ளது மிகவும் ஆபத்தானது, அது அந்நாட்டிற்கு பெறும் விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த நாட்டில் உள்ள ஜேர்மனி தூதரகத்தை தற்காலிகமாக மூடியுள்ளதாகவும், அங்குள்ள அதிகாரிகள் கடந்த வெள்ளியன்று நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன் கிழமையன்று ஏமனில் உள்ள ஜேர்மனியர்கள் பாதுகாப்பு கருதி அந்நாட்டை விட்டு வெளியேறி விடுவது சிறந்தது என வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இத்தாலியின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஏமனின் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய ஐ.நா சபையின் தூதரான Jamal Benomar, தூதரக அதிகாரிகள் ஏமன் நாட்டிற்கு திரும்பும் வகையில் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்ந்து செயல்படுவார் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஏமனில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து பேசிய ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன், ‘உள்நாட்டு யுத்தங்கள் மூலம் தன்னுடையை அழிவை ஏமன் சந்தித்து வருகிறது’ என கருத்து தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com