எகிப்தில் 21 கிறிஸ்தவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதற்கு போப் ஆண்டவர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
வாட்டிக்கனில் உள்ள ஸ்கொட்லாண்ட் தேவாலயத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், எகிப்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளால், 21 காப்டிக் (Coptic) கிறிஸ்தவர்களை கொன்றது கண்டிக்கத்தக்கது.
மேலும், கத்தோலிக்க, ஆர்தோடக்ஸ், காப்டிக் அல்லது லூதர்ன்ஸ் என எந்த பிரிவை கொண்டிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைகள் கிறிஸ்துவரை சார்ந்து உள்ளதால் அவர்கள் அனைவரும் ஒரே மதம் தான்.
பலியானவர்கள் எந்த குற்றமும் செய்யாத நிலையில் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக தான் கொல்லப்பட்டிருப்பதாகவும், அவர்கள் இறப்பதற்கு முன்பு ‘Jesus help me’ என்பது தான் கடைசி வார்த்தைகளாக இருந்ததாக போப் தெரிவித்துள்ளார்.
21 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து எகிப்து மற்றும் லிபியா நாட்டு ராணுவங்கள் அங்குள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியது.
வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் ஐ.எஸ் பகுதிகளில் குண்டுகளை பொழிந்து பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் தொடர்பாக பல புகைப்படங்களை எகிப்து நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் உயிரிழப்பு குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
மேலும், தாக்குதல் குறித்து பேசிய லிபியா ராணுவ அதிகாரி Saqr al-Jaroushi, வான்வெளி தாக்குதல் நடத்தியபோது பொதுமக்கள் சுமார் 50 பேர் இறந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ராணுவ தாக்குதல், சமயங்களில் பொது மக்கள் குழந்தைகளுடன் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
-http://world.lankasri.com