இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்கள் சிறந்தவை: அமெரிக்கா

keith_harper_001இலங்கையின் புதிய அரசாங்கம், பொறுப்புக்கூறல் பொறிமுறை தொடர்பில் ஆரம்ப முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

30 வருடங்களுக்கு பின்னர் மனித உரிமைகள் காப்பு மற்றும் நல்லிணக்கத்துக்காக இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மகிழ்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதி கெய்த் ஹாப்பர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாகவே பேரவையில் மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த இலங்கை தொடர்பான அறிக்கையை காலம் தாமதிக்க அமெரிக்கா இணங்கியதாக அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் பேரவையுடன் இணைந்து அறிக்கையை வெளியிடுவதற்கு தற்போதிருந்தே பணிகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை காலதாமதமான காலத்துக்குள் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு புதிய தகவல்களை இணைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: