ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களைக் கொல்வதற்கு, அமெரிக்கா பட்டியல் ஒன்றைத் தயாரித்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை கொல்வது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட பட்டியலில், தற்போது 24 முக்கியத் தலைவர்கள் உள்ளனர்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபெக்கர் அல்பாக்தாதி.
இவரை தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் தங்களது ஆதிக்கத்தை சிரியா மற்றும் ஈராக்கிலும் செலுத்தியதுடன், அங்கு பதுங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஐ.எஸ் அமைப்பில் வேற்று நாட்டுப் பிணைக் கைதிகளை கொல்லும் ‘ஜிகாதி ஜான்’ போன்ற நபர்களும் அமெரிக்காவின் தேடலில் இருக்கின்றனர்.
எனினும் அந்த அமைப்பினருக்கு உத்தரவிடும் தளபதி மற்றும் அமைப்பைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நபர்களை அமெரிக்கா மிகத் தீவிரமாகத் தேடி வருகிறது.

-http://world.lankasri.com

























