கனடா தற்போது ரஷ்யா மீதும் ரஷ்ய ஆதரவாளர்கள் மீதும் மேலும் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
உக்ரெய்ன் விவகாரத்தில் ரஷ்யா நடந்துகொள்ளும் முரண்பாடுகளை காரணமாக கொண்டு இந்த புதிய தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய தடை அறிவிப்பில் ரஷ்ய அரசாங்கத்தின் சார்புடைய பாரிய எண்ணெய்வள நிறுவனமான Rosneft-ம் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய பொருளாதாரத் தடை மற்றும் பயணத்தடை அறிவிப்பில் ரஷ்யா மற்றும் உக்ரெய்ன் நாடுகளைச் சேர்ந்த 37 தனிப்பட்ட நபர்களின் பெயர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் ரஷ்யா மற்றும் உக்ரெய்னைத் தளமாக கொண்டு இயங்கும் 17 நிறுவனங்களும் தடை அறிவிப்பில் பட்டியிலிடப்பட்டுள்ளன.
உக்ரெய்ன் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் இதுவரை 5,300ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், உக்ரெய்ன் மக்களுக்காக கனடா தொடர்ந்து குரல் கொடுக்கும் என பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் தெரிவித்துள்ளார்.
உக்ரெய்னின் இறையான்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டினை அங்கீகரிப்பதிலும், ஏனைய நாடுகளில் ரஷ்யா மேற்கொள்ளும் சட்டவிரோத ஆக்கிரமிப்பினை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதிலும் கனடா எப்போதும் தெளிவாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-http://world.lankasri.com