குர்தீஸ் போராளிகள் 21 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றும் போட்டியில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், குர்தீஸ் போராளிகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.
சமீபத்தில், குர்தீஸ் போராளிகள் 17 பேரை ஐ.எஸ் இயக்கத்தினர் கொன்று குவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக குர்தீஸ் போராளிகள் 21 பேரை இரும்பு கூண்டிற்குள் அடைத்து Kirkuk நகர வீதிகளில் ஊர்வலமாக அணிவகுத்து செல்வது போன்ற ஒரு வீடியோவை சமீபத்தில் வெளியிட்டனர்.
Healing the Believers’ Chests என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், பிணைக்கைதிகளுக்கு வழங்கப்படும் வழக்கமான ஆரஞ்சு நிற ஆடைகளுடன் குர்தீஸ் போராளிகளை தெரு வழியாக அழைத்துச் செல்கின்றனர்.
பின்பு, நால்புறமும் நெடுஞ்சுவர் எழும்பிய பரந்த பகுதி ஒன்றில் இரும்பு கூண்டுகளை நிற்க வைத்து, அதற்குள் இருக்கும் குர்தீஸ் போராளிகள் ஒவ்வொருவரிடமும் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் பேட்டி எடுப்பது போல் காட்சிகள் பதிவாகியுள்ளது.
சிறிது நேரத்திற்கு பிறகு, கூண்டுக்குள் இருந்த 21 போராளிகளையும் வெளியே இழுத்து வந்து மண்டியிட வைத்து அவர்களுக்கு பின்னால் கை துப்பாக்கிகளுடன் தீவிரவாதிகள் நிற்கிறார்கள்.
மேலும், ஒவ்வொரு குர்தீஸ் போராளியை பற்றிய தகவல்கள் வீடியோவில் காண்பிக்கப்படுகிறது. 9 நிமிடங்கள் ஒளிபரப்பப்படும் இந்த வீடியோவின் இறுதியில் ஒரு வயதான போராளியின் முகத்தை நோக்கி துப்பாக்கி வெடிப்பது போன்ற காட்சியுடன் வீடியோ முடிவடைந்து கருப்பான காட்சிகள் காண்பிக்கப்படுகிறது.
இதன் மூலம் அந்த முதியவர் இறப்பதுடன் எஞ்சிய 20 போராளிகளும் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை உணர்த்தும் விதமாக உள்ளதாக பரபரப்பான செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 25,000 ஈராக் ராணுவ வீரர்களின் உதவியுடன் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான Kirkuk பகுதியை மே மாதத்திற்குள் மீட்க உள்ளதாக சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அளித்த தகவலை தொடர்ந்து இந்த கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com