ஐ.எஸ் அமைப்பில் இணைந்த 5 வயது “இளம்புலிகள்”! மிரளவைக்கும் வீடியோ

child_jihadist_001இளம் வயது சிறுவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் இராணுவப் பயிற்சியில் நிற்பது போல், சுமார் 100 சிறுவர்கள் வரிசைகளாக அணிவகுத்து நின்று போர்ப் பயிற்சி மற்றும் தீவிரவாத பயிற்சி பெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் கருப்பு நிற கொடி பறக்க, சீருடைகளுடன் தலையில் கருப்பு நிற ரிப்பன்களை கட்டியபடி, பயிற்சியாளர்களின் கட்டளையை கேட்டு அந்த சிறுவர்கள் செயல்படுகின்றனர்.

5 வயதுக்கு குறைவான சிறுவர்களும் இணைந்த இந்த படையை ‘இளம் புலிகள்’ என இந்த படையை ஐ.எஸ் தீவிரவாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

-http://world.lankasri.com