ஐ.எஸ்-க்கு எதிராக போரிட விமானம் தாங்கி கப்பலை களமிறக்கிய பிரான்ஸ்

france_ship_002ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த ராணுவ விமானம் தாங்கி கப்பலை அனுப்பியுள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தலைமையில் கூட்டணி நாடுகளின் ராணுவங்கள் ஈராக்கில் உள்ள ஐ.எஸ் அமைப்பு தீவிரவாதிகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் இணைந்து செயல்படும் விதத்தில் பிரான்ஸின் Charles de Gaulle என்ற விமானம் தாங்கி கப்பலை வளைகுடா (Gulf) கடல் பகுதியில் நிறுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் உள்ள ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான தாக்குதலில் Charles de Gaulle பங்கு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும், விமானம் தாங்கி கப்பலுக்குரிய விமானங்களை ஏற்கனவே அனுப்பிவிட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சர் Jean-Yves Le Drian-ன் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

விமானம் தாங்கி கப்பலில் இருந்து இன்று காலை Rafale என்ற போர் விமானம் பக்ரெய்ன் கடற்கரையை கடந்து ஈராக்கை நோக்கி 200 கிலோமீற்றர் பயணம் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது உருவாக்கியுள்ள போர் நடவடிக்கைகள் மூலம் ஐக்கிய அரபு நாடுகளின் தளங்களிலிருந்து ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதற்கான காலநேரம் பாதியாக குறைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக அமெரிக்க தலைமையிலான தாக்குதல்களுக்கு ஆதரவாக பிரான்ஸ் Chammal என்ற ஆப்ரேஷனை கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது.

தற்போது அனுப்பப்பட்டுள்ள விமானம் தாங்கி கப்பலில் 9 Rafale ரக போர் விமானங்களும் 6 Mirage ரக போர் விமானங்களும் உள்ளன.

மேலும், இந்த விமானம் தாங்கி கப்பல் ஜோர்டன் மற்றும் அரபு நாடுகளில் தளங்களை அமைத்து, அங்கிருந்து ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை தாக்க தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com