ஹிட்லர் செல்ஃபியால் பிரச்சனை: மீண்டும் பதவியை பிடித்த பெகிடா நிறுவனர்

hitlerselfie_issue_001ஹிட்லராக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட குற்றத்தினால் பதவி விலகிய லூட்ஸ் பேச்மேன்(Lutz Bachmann) தற்போது மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய தாக்குதலுக்கு எதிராக பெகிடா(Pegida) என்ற அமைப்பை நிறுவிய லூட்ஸ், கடந்த ஜனவரி மாதம் தன்னை ஹிட்லராக சித்தரித்து செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டதுடன், இனவெறியை தூண்டும் விதத்தில் பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதனால் கடும் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் தனது தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

இதனைத் தொடர்ந்து பெகிடா அமைப்பின் முன்னாள் செய்தி தொடர்பாளர் கேத்ரின் ஓர்டெல்(Kathrin Oertel) உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் அந்த அமைப்பிலிருந்து விலகி Direct Democracy for Europe(DDfE) என்ற புதிய அமைப்பை உருவாக்கினர்.

மேலும், லூட்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்தபோது மக்களிடம் இருந்த ஆதரவு, அவர் பதவி விலகியதும் படிப்படியாக குறைய தொடங்கியது.

இதற்கிடையில் சமீபத்தில் அந்த அமைப்பில் நடத்தப்பட்ட ரகசிய ஓட்டெடுப்பில், லூட்ஸை தலைவர் பொறுப்பில் மீண்டும் நியமிக்க பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

மேலும், ஹிட்லராக சித்தரித்து புகைப்படங்களை வெளியிட்டதால் பிரச்சனை எதுவும் இல்லை என அந்த அமைப்பு குறிப்பிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து பெகிடா அமைப்பின் மூன்று தலைவர்களில் ஒருவராக லூட்ஸ் தொடர்ந்து செயல்படுவார் என அந்த அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com