போர்க்குற்ற அறிக்கை பிற்போடப்பட்டமை கவலையளிக்கிறது: த.தே.கூட்டமைப்பு

sambanthanஇலங்கை தொடர்பான போர்க்குற்ற அறிக்கை மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்கப்படாமல் பிற்போடப்பட்டமை கவலை அளிப்பதாக தமிழத் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மனுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இதனை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த அறிக்கை பிற்போடப்பட்ட போதிலும், அடுத்த செப்டெம்பர் மாதம் அந்த அறிக்கை வலுவானதான அமையும் என எதிர்பார்ப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் நேற்று மாலை ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அரசியல் விவகாரப் பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: