பிலிப்பின்ஸில் ராணுவத் தாக்குதல்: 24 பயங்கரவாதிகள் சாவு

AbuSayyafபிலிப்பின்ஸில் வனப் பகுதியில் ஒளிந்து செயல்பட்டு வந்த அல்-காய்தா ஆதரவு பெற்ற அபு சய்யஃப் பயங்கரவாதிகள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையில் இதுவரை 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

1990-களில் தொடங்கப்பட்ட அபு சய்யஃப் அமைப்பு, ஆள்களைக் கடத்திப் பணம் பறிப்பதற்குப் பெயர் பெற்றது. தற்போது அந்த அமைப்பின் பிடியில் 7 பிணைக் கைதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2004-ஆம் ஆண்டு மணிலா கடலில் அபு சய்யஃப் நிகழ்த்திய பெட்ரேல் குண்டுத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவிடமிருந்து பயிற்சி உள்ளிட்ட உதவிகள் பெற்றும், பிலிப்பின்ஸ் அரசுப் படையினரால் பல ஆண்டுகளாக அபு சய்யஃப் பயங்கரவாதிகளை ஒடுக்க முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில், அந்த அமைப்பை ஒடுக்குவதற்கான இறுதி கட்டப் போரை பிலிப்பின்ஸ் ராணுவம் தொடங்கியுள்ளது.

-http://www.dinamani.com