மக்களை கொன்று குவித்த வந்த ஐஎஸ் அமைப்பு தற்போது தனது அடுத்த குறியை டுவிட்டர் சமூக வளைதளத்திற்கு வைத்துள்ளது.
சமூக வலைதளமான டுவிட்டர் மூலம், உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகளுடன் ஐ.எஸ் அமைப்பு தொடர்பு ஏற்படுத்தி தாக்குதல்களை நடத்தி வருவதால், டுவிட்டரில் உள்ள ஜிகாதிகளின் கணக்குகளை தடை செய்யுமாறு உலக தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இதனையடுத்து, டுவிட்டரில் உள்ள ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஜிகாதிகளின் கணக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக அந்நிறுவனம் மூடி வருகிறது.
டுவிட்டர் நிறுவனத்தின் இச்செயலால் ஆத்திரம் அடைந்த ஐ.எஸ் அமைப்பு டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர்களின் ஒருவரான Jack Dorsey என்பவரையும், அந்நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்களையும் கொல்லுமாறு ஜிகாதிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
BuzzFeed என்ற இணையதளத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஒரு தகவலை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
அதில், ‘நீங்கள்(Jack Dorsey) எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதன் விளைவு உங்களையே பாதிக்கும். எங்களுடைய டுவிட்டர் கணக்குகளை முடக்கினாலும் கூட, நாங்கள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருப்போம்.
ஆனால் நாங்கள், உங்கள் மீது தாக்குதல் நடத்தினால் உங்களால் திரும்பவே முடியாது என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் டுவிட்டர் கணக்குகளை தொடர்ந்து முடக்கி வருவதால், அந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தான் இந்த மிரட்டலை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக சந்தேகம் கிளம்பியுள்ளது.
தங்கள் நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை உறுதி செய்த டுவிட்டர் நிறுவன அதிகாரிகள், அந்த கொலை மிரட்டலின் உண்மை தன்மையை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
-http://world.lankasri.com