எங்கள் விமானியை எரித்த ஐ.எஸ்-யை விடமாட்டோம்: போரிட துடிக்கும் மன்னர்

abdulla_callingisis_001ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிராக மூன்றாவது உலகப்போரை நடத்த உலக தலைவர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என ஜோர்டன் மன்னர் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த மன்னர் அப்துல்லா, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ என எந்த மதபாகுபாடுமின்றி அனைத்து மக்களையும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருந்த காப்பாற்ற மூன்றாவது உலகப்போரை தொடங்க வேண்டும்.

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த போரில் இஸ்லாமியர்களை பாதுகாக்க வேண்டும் என்ற தார்மீக பொறுப்பு இருப்பதால், தீவிரவாதிகளை ஒடுக்குவதில் துணிச்சலாக செயல்பட வேண்டும்.

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் பெரும் பகுதிகளை அபகரித்துக்கொண்ட ஐ.எஸ் இயக்கம் நமது நாட்டு எல்லைகளுக்குள் காலடி வைப்பதற்கு முன் அவர்களை கூண்டோடு அழிக்க வேண்டும்.

ஐ.எஸ் இயக்கத்தின் மேல் தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்க தலைமையிலான கூட்டணி நாடுகளின் ஒரு அங்கமான ஜோர்டன், அந்த போரில் தனது முழு ஆதரவையும் படை பலத்தையும் வழங்கி வருவதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது நாட்டு விமானியான Moath al-Kasasbeh என்பவரை ஐ,எஸ் தீவிரவாதிகள் உயிரோடு எரித்த காட்சியை பார்த்து கண்ணீர் வடித்த தனது குடிமக்களின் வேதனையை நன்கு உணர்ந்துள்ளதாகவும், இதுபோன்ற கொடூர செயல்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என கூறியுள்ளார்.

ஜோர்டன் நாட்டின் உள்துறை அமைச்சரான Hussein al-Majali கூறுகையில், ஐ.எஸ் தீவிரவாதிகளை முழுவதுமாக துடைத்து எறியும்வரை அரசு ஓயாது என்றும் விமானியை எரித்து கொன்றதை தொடர்ந்து, ஐ.எஸ் பகுதிகள் மீது சுமார் 72 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜோர்டன் நாட்டு ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் அமெரிக்கா வழங்கி வந்த 660 மில்லியன் டொலர்களை 1 பில்லியன் டொலராக உயர்த்த அமெரிக்கா சம்மதித்துள்ளதாக மன்னர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

-http://world.lankasri.com