புதிய அரசாங்கம் நல்லாட்சி எனும் போர்வையில் இருப்பினும் இந்தியாவின் விருப்பத்திற்கிணங்கவே இங்கு ஆட்சி இடம்பெறுவதாகவும் அரசை இந்தியாவே ஆட்டுவிப்பதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.தமிழ் தேசியவாதத்தை வளர்த்து தனி நாட்டை நோக்கி வடக்கைப்
பிரித்தெடுக்கும் சூழ்ச்சிக்கு அடிபணிந்து மக்களை ஏமாற்றியே இவ்வரசாங்கம் ஆட்சியிலமர்ந்திருப்பதாகவும் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியது சம்பிக்க ரணவக்க, அநுர குமார திசாநாயக்க, ரணில், மைத்ரி, சம்பந்தன், ஹகீம், ஹிருனிகா என சொல்லப்படினும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி தாமே இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக பகிரங்கமாக அறிவித்திருப்பதாகவும் அதன் அடிப்படை வட பகுதியை பிரித்தெடுப்பதாகும் எனவும் விமல் வீரவன்ச தற்போது கண்டியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மஹிந்த ஆதரவுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், மஹிந்த ராஜபக்ச காந்தம் போன்றவர் எனவும் அவர் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் வரும் எனவும் தெரிவித்த விமல் வீரவன்ச நுகேகொடயில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டிருந்ததாகவும் கண்டியிலும் அது போன்றே லட்சக் கணக்கில் சனத்திரள் காணப்படுவதாகவும் கொழும்பு துறைமுக நகரத்தை நிறுத்த வேண்டிய தேவையும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமே இருப்பதாகவும் அதனடிப்படையிலேயே அது நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்ததோடு தேர்தலே இல்லாமல் ரணிலை பிரதமராக்கிய குற்றத்திற்காக ஜனாதிபதி களனி விஹாரையைச் சுற்றி மூன்று முறை வந்தாலும் பாவம் தீராது எனவும் தெரிவித்ததோடு நுகேகொடயில் ஆரம்பித்த இந்தப் போராட்டம் அநுராதபுரம், குருநாகல, மாத்தற என தொடரும் எனவும் சற்று முன்னர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
-http://sankathi.com