தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை கனடாவின் பங்கு மிகவும் காத்திரமானதாக இருக்கும்

கனடியத் தமிழர் தேசிய அவையின் இரவு விருந்து நிகழ்வில் மாண்புமிகு கிரிஸ் அலெக்சாண்டர் அவர்கள் இலங்கை பற்றி கூறுகையில்: கனடா தான் முதன் முதலாக இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டுமென வலியுறுத்தியது. கனடா தான் முதன்


canada

முதலாக இலங்கையில் நடந்த பொது நலவாய நாடுகளின் மகாநாட்டை புறக்கணித்தது. அதன் பின்பு பல நாடுகள் கனடாவின் முன்மாதிரியைப் பின்பற்றி இந்தியா உட்பட அந்த மகா நாட்டை புறக்கணித்திருந்தனர். கனடாவின் தொடர்ச்சியான அழுத்தங்கள் தான் இராஜபக்க்ஷே அரசாங்கத்தை தனிமைப்படுத்த உதவியது.

கனடாவின் பங்கு தமிழருக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ச்சியாகவும் மிகவும் காத்திரமானதாகவும் இருக்கும். இலங்கையில் புதிய அரசாங்கத்திடம் நாம்இ சமரசம் என்ற ஒன்றிற்கு முன் தமிழருக்கான நீதி கிடைக்கவேண்டும் என்ற எமது கருத்தை வலியுறுத்துவோம். கனடிய தமிழராகவும் கனடியராகவும் நாம் ஒன்றுபட்டு தமிழருக்கான நீதியைப் பெறவேண்டும். கனடிய அரசாங்கத்தின் ஆதரவு உங்களுக்கு தொடர்ந்தும் என்றும் இருக்கும்.

-http://sankathi.com

TAGS: