கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரில் கித்தா லவான் பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் தாங்களாகவே முன்வந்து போலீசாரிடம் சரணடைய வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பாக்கார் கூறியுள்ளார்.
“வரவில்லை என்றால், நாங்கள் அவர்களை தேடுவோம்”, என்று செராஸ்சில் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஐஜிபி கூறினார்.
“கம் லா, அவர்களை கண்டுபிடிப்பதில் எங்களுக்கு சிரமம் ஏதும் இல்லை. அவர்கள் வரட்டும். அவர்களை கைது செய்து விசாரணை நடத்துவோம்”, என்று அவர் மிரட்டினார்.
மார்ச் 7 இல், கித்தா லவான் 10,000 பேர் பங்கேற்ற ஒரு பேரணியை நடத்தியது.
இப்பேரணி சம்பந்தமாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் நிக் நாஸ்மி நிக் அஹமட் மற்றும் பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவர் சைபுல்லா ஸுல்கிப்லி ஆகியோர் அப்பேரணி சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெட்கம் கெட்ட பன்………
எந்த காவல்நிலையம்,எந்த திகதியில் என்று குறிப்பிட்டால்,இந்த 10,000 பேருக்கு
மேலாக சரணடைவார்கள்,
அட பாவி, அப்பாவி மக்களின் உயிர்களை வேட்டையாடுவது உங்களுக்கு புதுசு இல்லையே…அரங்கேற்றுங்கள் அதிகார துஷ்பிரயோகத்தை..!
ஆமாம் ஐயா, தீவிரவாதிகளிடம் உரையாடுங்கள். மக்களை வேட்டையாடுங்கள்.
மலேசிய IGP இப்படி கூறியதன் மூலம் உலகிலேயே தலை சிறந்த நகைச்சுவை நடிகர் நான்தான் என்பதை மீண்டும் நிருபித்து உள்ளார்.
கொலை குற்றவாளி சிருல் வெளிநாட்டுக்கு தப்பியோடும் பொது நீங்கள் புடுங்கிகொண்டு (அதாவது வேட்டையாடியதை) இருந்ததை பார்த்து மக்கள் நக்கலாக சூ…. சிரித்தது கூடவா தெரிவில்லை.
இந்நாட்டில் இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டிய குற்றங்கள் எவ்வளவோ இருக்க அதையெல்லாம் விடுத்தது ,கவைக்கு உதவாத சங்கதிகளை தோளில் சுமக்கும் வெண்ணை வெட்டி சிப்பாய்களை என்னவென்று சொல்வது ?