லிபியாவின் எண்ணெய் வயலில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக தலைத் துண்டித்து படுகொலை செய்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் லிபியாவில் உள்ள எண்ணெய் வயல்களை குறிவைத்து தற்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு அல்–கானி உள்ளிட்ட 11 எண்ணெய் வயல்களை லிபியா அரசு மூடியுள்ளது. எனினும் இவற்றை கைப்பற்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஷால்லா அருகேயுள்ள அல்–கானி எண்ணெய் வயலில் பணியில் இருந்த 8 பாதுகாப்பு படையினரை ஐ.எஸ். தீவிரவாதிகள் சிறைபிடித்தனர்.
இதனையடுத்து அவர்களின் கைகளை கட்டி, தலைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இத்தகவலை லிபியா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தவிர எண்ணெய் வயல்களில் பணிபுரியும் மேலும் 9 வெளிநாட்டு பணியாளர்களை கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
-http://world.lankasri.com