லண்டனில் சுரங்கப் பாதை தோண்டும் போது அதிர்ச்சி: ஆயிரக்கணக்கில் எலும்புக்கூடுகள்

லண்டனில் ரயில் சுரங்கப் பாதைக்காக பள்ளம் தோண்டும் போது, யாரும் எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான எலும்புக் கூடுகள் மண்ணில் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக சுரங்கப் பாதை தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் நடத்திய முதற்கட்ட ஆய்வில், லண்டனின் இந்த பகுதி, பல ஆண்டுகளுக்கு முன்பு இடுகாட்டுப் பகுதியாக இருந்திருக்கலாம் என்றும், இந்த மனித எலும்புக் கூடுகளை ஆராய்ச்சி செய்வதன் மூலம், லண்டனில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் வாழ்ந்திருக்கிறது என்பதை கண்டறியலாம் என்றும் கூறுகின்றனர்.

சுமார் 16 மற்றும் 17வது நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 3000 எலும்புக் கூடுகள் அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில், ஒரு குழந்தையின் எலும்புக் கூடும், அது புதைக்கப்பட்ட மரத்தால் ஆன கல்லறைப் பெட்டியும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com